ஹோமம் யாகம்

Homam Yagam

25 A/1, Mettupalayam Road, Goundampalayam, Coimbatore - 641030.
Contact No : +91 - 8344242526

ஹோமம்- ஓர் அறிமுகம்

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் உட்சபட்ச பரிகாரம்: ‘ஹோமம்’ தான். இதுக்கு மேலே பரிகாரம் செய்யணும்னா தவம்தான் செய்யணும்.

ஒரு ஹோமம் செய்றிங்க. ஐயர் நெருப்பு வளர்க்கிறார். மந்திரம் சொல்றார். என்னென்னமோ காயி, வேரு, இலை, பட்டைன்னு அக்கினியில் போடுறார். அதை பற்றி கொஞ்சமாவது தெரியுமா? 

தெரியாதுல்ல.

அதிலும் ஹோமம் மாதிரி உயர்ந்த பரிகாரங்கள் செய்யும் போது, அரக்க சக்திகள் அதை தடுக்க பார்க்கும் என்கிறது புராணங்கள்.

உண்மைதான். ஹோமத்தின் வழி அந்த பலனை பெற வேண்டும் என்ற விதியமைப்பு இல்லைனா, பல தடைகள் வரும்.

கோடான கோடி மக்கள் வாழக்கூடிய இந்த பிரபஞ்சத்தில் வாழ்கிறோம். சரியான முகவரி எழுதப்பட்ட தபால் எப்படி குறுப்பிட்ட நபரை சென்றடைகிறதோ, அதைபோல் செய்யகூடிய இந்த ஹோமங்கள் குறுப்பிட்ட இலக்குகளை சென்றடையக் கூடியதாக இருக்க வேண்டும்.

அந்த இலக்கு என்பது யாகத்தின் தலைவராக இருப்பவருக்கு, அதாவது யாருக்காக செய்கிறோமோ அவருக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக பிராத்தனை செய்யப்படுவது.

நம் வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்திற்கும் காரணம் நவகிரகங்கள். நம்புகிறமோ இல்லையோ, ஏற்றுக் கொள்கிறோமோ,  இல்லையோ, அவர்கள் தங்கள் பணியை செய்கிறார்கள்.

இதைதான் வாங்கி வந்த வரம் என்கிறார்கள். இவர்கள் நம் வாழ்க்கையில் புகுந்து விளையாடுவதால் தான் நாம் பரிகாரம் செய்கிறோம். அதனால் நவகிரங்களை வணங்கி பூஜிக்க வேண்டும்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் மூலமந்திரம், வேதமந்திரம், காயத்திரி மந்திரம், பிராத்தனை மந்திரம் என்ற நான்கு உண்டு.

உதாரணமாக, மூல மந்திரம் என்பது பீஜாச்சரம் கொண்டு சொல்வது. அது “ஓம் ஸ்ரீம் ரீம்” என்று வரும். வேத மந்திரம் என்பது ஒலி அலைகளால் நன்மை பெறுவது. காயத்திரி மந்திரம் என்பது எந்த தெய்வத்தை நோக்கி ஹோமம் செய்கிறோமோ அவரின் புகழுரைகளை சொல்வது. பிராத்தனை மந்திரம் என்பது நம் வேண்டுதல் பலிப்பதர்க்காக சிரம் தாழ்த்தி, கை கூப்பி, மனதார பிராத்திப்பது என்று பொருள்.

பாராயண முடிவில் சமகம் சொல்லப்படுகிறது. வசுவதாரா கொண்டு நெய் ஊற்றும் போது சொல்லப்படும் மந்திரம் ‘சமகம்’. பொதுவாக, ஹோமங்களை இரண்டு வகையாகச் சொல்வார்கள். ஒன்று- ‘காம்ய ஹோமம்’, மற்றொன்று – ‘நைமித்திக ஹோமம்’. செல்வம், உடல் நலம் போன்ற வளங்களைப் பெறும் பொருட்டு, வீட்டிலேயே செய்யும் ஹோமங்கள், “காம்ய ஹோமம்” எனப்படும்!

அடுத்த வகையான நைமித்திக ஹோமத்தை உலக நலனுக்காகவும் அமைதிக்காகவும் பொதுவான ஓர் இடத்தில் செய்வார்கள். நாட்டில் சுபிட்சம் நிலவவும் மழை வேண்டியும் கோயில் மாதிரியான பொது இடங்களில் பலர் முன்னிலையில் இத்தகைய ஹோமங்களைச் செய்வார்கள். ஹோமங்களை எந்த அளவுக்கு நாம் சிரத்தையாகப் பண்ணுகிறோம் என்பதை வைத்து பகவான் அனுக்கிரஹம் செய்வார்.

பகவத் கீதையில், ‘நீ என்னை நினைத்தால் நான் உன்னை நினைப்பேன்’ என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். வீட்டில் ஏதேனும் ஹோமங்கள் நடத்தப்படும்போது ஹோமம் செய்பவரின் சிந்தனையும், மனமும் ஹோமத்திலேயே லயித்திருக்க வேண்டும். வேறு எந்தச் சிந்தனையும் வந்து இடையூறு செய்யக் கூடாது. சிலர் மனசால் நினைத்து ஹோமம் செய்த மாத்திரத்திலேயே பகவான் வந்தது உண்டு. அக்னியிலேயே ஜோதி ஸ்வரூபமாக பகவானைச் சிலர் பார்க்கலாம். 

தெரிந்த ஹோமமும் தெரியாத விளக்கமும்

நெருப்பினை ஏற்றி அதில் பலவேறு பொருட்களை இட்டு எரிப்பதன் மூலமாக இறைவனை வழிபடும் முறையே ‘ஹோமம்’ என பொதுமைப் படுத்திவிடலாம். இந்து மரபியலில் வேதகாலத்தில் இருந்தே, இத்தகைய சடங்கு முறைகள் வழக்கில் இருந்து வருகிறது. வேறு சில மதங்களிலும் இத்தகைய வழிபாட்டு முறைகள் வழக்கத்தில் இருக்கின்றன.

ஆதி மனிதனின் வாழ்வில் சூரிய வழிபாடு பிரதானமாய் இருந்தது. நெருப்பின் பயன்பாடு அறியப்பட்ட பின்னர், நெருப்பினை சக்திவாய்ந்த சூரிய கடவுளின் பிரதிநிதியாக கருதினர். இதன் தொடர்ச்சியாக தங்களை காத்துக் கொள்ளவும், தங்களது வேண்டுகோள்களை சூரிய கடவுளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் ஊடகமாய் நெருப்பு விளங்கத் துவங்கியது. இந்த புள்ளியில்தான் வேள்வி அல்லது ஹோமங்களின் ஆரம்பப் புள்ளி இருந்திருக்க வேண்டும். கடவுளுக்கு அர்பணிப்பதாக கருதி பொருட்கள், விலங்குகள் சமயங்களில் மனிதர்களைக் கூட யாகத்தில் இட்டு வழி பட்டிருக்கின்றனர்.

யஜுர்வேதத்தில் முப்பது வகையான யாகங்களைப் பற்றிய குறிப்புகள் காணப் படுகின்றன. இந்த யாகங்களை குறிப்பிட்ட இனத்தவரே செய்திட வேண்டும் என்கிற மரபு காலம் காலமாய் இருந்து வருகிறது. ஒவ்வொரு கடவுளுக்கும், ஒவ்வொரு தேவதைக்கும் என தனித் தனியான யாக முறைகள் கூறப் பட்டிருக்கிறது. யாகத்தில் இட வேண்டிய பொருட்களும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் மாறுபடும். யாகங்களின் மூலம் அந்தந்த தெய்வங்களை திருப்தி செய்து அதன் மூலம் நற்பலன்களைப் பெறலாம்; என்கிற கருதுகோளே காலம் காலமாய் இந்த பழக்கம் தழைத்திருக்க காரணம்.

அகத்தியர், திருமூலர், போகர், அகத்தியர், புலிப்பாணி, கருவூரார், கோரக்கர் போன்ற பல சித்தர்களின் பாடல்களில் ஹோமம் பற்றிய தகவல்கள் விரவிக் கிடக்கிறது. அகத்தியர் தனத் “ஏமதத்துவம்” என்கிற நூலில் ஹோமம் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

“பாரப்பா பார்தனிலே யிருக்குமட்டும்
பத்திகொண்டு டிசைந்துநீ ஓமஞ்செய்தால்
நேரப்பா பருதிமதி யுள்ளம் மட்டும்
நீமகனே பூரணமாய் வாழ்வாயப்பா
காரப்பா நித்தியகர்ம அனுஷ்டானங்கள்
கருணையடன் செய்துகொண்டு
கனிவாய்மைந்தா
தேரப்பா சிறப்புடனே ஓமஞ்செய்து
சிவசிவா விசயோகத் திறத்தைகாணே.”
- அகத்தியர்

ஹோமம் செய்வதனால் உண்டாகும் சிறப்புகளை அகத்தியர் இந்த பாடலில் கூறியிருக்கிறார். திருமூலர் அருளிய திருமந்திரத்தில் பல இடங்களில் ஹோமம் பற்றிய வரிகள் காணக் கிடைக்கின்றன. அவை பின்வருமாறு...

"ஓமத்திலேயும் ஒருத்தி பொருந்தினாள்"
"வின்னா விளம்பிரை மேவிய குண்டத்துச்"
"நாடறிமண்டலம் நலவிக் நலவிக் குண்டத்தும்"
"நின்ற குண்டம் நிலையாறு கோணமாய்"
- திருமூலர்

பழந் தமிழகத்தில் அறுவடை முடிந்த பின்னர் வயலில் எஞ்சியிருக்கும் பயிர்களை கொளுத்தி விடும் பழக்கம் இருந்தது. இன்றும் கூட சில இடங்களில் இதனைக் காணலாம். இதன் பின்னர் மதம் சார்ந்த நம்பிக்கைகள் இருந்தனவா என்பது தெரியவில்லை.

ஆனால் அறிவியல் ரீதியாக இத்தகைய செயல்கள் நிலத்திற்குத் தேவையான சத்துக்களை தரும். இதை இங்கே குறிப்பிட காரணம் வரப்புகள் சூழ்ந்த வயல்வெளியில் வளர்த்த தீயின் சுருங்கிய அல்லது சுருக்கிய வடிவமே ஹோம குண்டங்களாயிருக்க வேண்டும். ஏனெனில் ஹோமங்கள் பூமியின் மீதுதான் வளர்த்திட வேண்டுமெனவும் கூறப்பட்டிருக்கிறது.