ஹோமம் யாகம்

Homam Yagam

25 A/1, Mettupalayam Road, Goundampalayam, Coimbatore - 641030.
Contact No : +91 - 8344242526

ஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள்

எந்த ஒரு நற்காரியங்கள் செய்யும் முன்பும் ‘கணபதி ஹோமம்’ , உடல் ஆரோக்கியத்திற்கு ‘மிருத்யுஞ்ச ஹோமம்’ , பொருள் நலம் சேர ‘மகாலட்சுமி ஹோமம்’ , எதிரிகள் பலமற்று போக ‘சண்டி யாகம்’ என ஹோம தீ வளர்த்து பிரார்த்தனை செய்வது நம் முன்னோர் வழி வந்த மரபு . ஹோமங்கள் என்பது நீண்ட நெடிய மந்திரங்களுடன் கூடிய வழிபாட்டு முறையாகும் . அதில் போடப்படும் பொருட்களுக்கும் காரண காரியங்களை தொகுத்துள்ளனர் நம் முன்னோர்கள் .

அவ்வாறு நடத்தப்படும் ஹோமங்களில் விதவிதமான பொருட்கள் போடப்படுகிறது .ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் ‘சமித்து’ எனப்படும் குச்சிகளின் பலன்களும் ஒவ்வொரு வேண்டுதலுக்கு ஏற்ப அமையும் .

அப்படி ஹோம குண்டத்தில் போடப்படும் பொருட்களும் அதனால் ஏற்படும் பலாபலன்களை பற்றியும் நாம் அறிந்துக்கொள்ளலாம் .

நவக்ரஹ ஹோம சமித்துகள்: எருக்கு, புரசு (பலாசம்), அத்தி, அரசு, வன்னி, அருகம் புல், கருங்காலி, நாயுருவி,, தர்ப்பை.

அத்தி சமித்து : சுக்கிரனுக்குப் பிடித்தது. மக்கட்பேறு. பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும். பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும்.

அரசமர சமித்து : குருவிற்குப் பிடித்தது, அரசாங்க நன்மை, அரச மரத்தின் சமித்தால் தலைமைப் பதவி வரும். போரில் ஜெயம் அடைந்து அரச தன்மை கிடைக்கும்.

அருகம் புல் : விநாயகருக்கும்,ராகுவுக்கும் பிடித்தது, விஷ பயம் நீங்கும், இதனால் பூர்வ ஜென்ம வினைகளும், சர்வ இடையூறுகளும் நீங்கி காரியம் சித்தியடையும். கீர்த்தியும், புகழும் பெறலாம். அறிவும், அழகும், வசீகரமும் உண்டாகும். கணபதி ஹோமத்தில் இதைப் பயன்படுத்துவார்கள்.

ஆலங் குச்சி : யமனுக்குப் பிடித்தமானது. புகழைச் சேர்க்கும். இது ம்ருத்யஞ்சய வேள்வியின் முக்கிய சமித்து. இதனால் நோய்கள் நீங்கும். ஆயுள் நீடிக்கும்

நாயுருவி சமித்து : புதனுக்குப் பிடித்தது. : மகாலட்சுமி கடாட்சம், சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்தது.

தர்ப்பை சமித்து : கேது பகவானுக்கு தர்ப்பை சமித்து மிகவும் பிடித்தமானதாகும். இது ஞான விருத்தியைத் தரும்.

வன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப் பிடித்தது, ஏவல், பில்லி, சூனியம் அகலும். இதில் அக்னிப் பகவான் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

கருங்காலி சமித்து: ஏவல் ,பில்லி ,சூனியம் அகலும் .

புரச சமித்து: குழந்தைகளின் கல்வி வளர்ச்சி.

நொச்சி சமித்து: காரியத்தடை விலகும்.

வெள்ளை எருக்கு : இது சூரிய கிரகத்தின் சமித்தாகும். இம்மூலிகை சர்வசக்தி பொருந்தியது. வசியம், மோகனம் ஆகிய அஷ்டாமித்துகளையும் அடையலாம். இச்சமித்துக்களால் ராஜ வசியம், ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் ஆக சர்வ வசியங்களையும் அடையலாம். எடுத்த வேலை இனிதே முடியும்.

இதையே கபிலர் பாடுகிறார் (புறம்—106):–
“நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா”

பொருள்: நல்லதோ, கெட்டதோ எருக்கம் பூவை உள்ளன்போடு கொடுத்தாலும் கடவுள் வேண்டாம் என்று சொல்லமாட்டார். ஆக தமிழன் 2000 ஆண்டுகளாக எருக்கம் பூ, இலையைப் போட்டு பூஜை செய்வதைக் கபிலர் சொல்லிவிட்டார்.

தேவதாரு : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல தெய்வங்களும் வேண்டிய வரங்களைக் கொடுப்பார்கள்.

பூவரசு : இந்த சமித்து ‘பூலோக அரச மரம்’ என்று வழங்கப்படுகிறது. அரசு சமித்து இல்லாத குறையை இந்த சமித் அரசு சமித்தினால் செய்யப்படும் ஹோமம் தரும் பலன் இதற்கும் உண்டு.

பலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்தது, இதனால் சந்திரகிரக பிரீதியாகும். பலாசு புஷ்பத்தால் எல்லா இஷ்ட காரியங்களும், பலாசு ரஸத்தால் ஞான விருத்தியும், சிறந்த புத்தியும் பெறலாம்.

தாமரை புஷ்பம் : லஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது

மாதுளை : அழகான் வடிவமும்,வசீகரமும் கிடைக்கும்.

எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை.

வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது, வில்வ சமித்தினைக் கொண்டு ஹோமம் செய்தால் ராஜ யோகம் கிட்டும். வில்வப்பழ ஹோமத்தால் சக்தி செல்வங்களையும் பெறலாம். சிவசக்தி சம்பந்தமான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வம் சமித்தாகப் பயன்படுத்தினால் பலன்கள் நிறைய உண்டு.

துளசி சமித்து : நாராயணனுக்குப் பிடித்தது, துளசி சமித்தினால் ஹோமம் செய்தால் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி நடைபெறும். எண்ணிய காரியம் கைகூடும்.

சோமவல்லிக் கொடி : கொடிக்கள்ளி எனப்படும் இதன் ரசத்தைப் பிழிந்து ’சோமாம்ருதம்’ ம்ருத்யுஜய மந்திரத்தினால் ஹோமம் செய்தால் சகல நோய்களும் நீங்கி, தேகத்தில் அமிர்தம் உண்டாகி பிரம்மதேஜஸ் பெறலாம். கொடியை கணுக்கள் தோறும் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியிடம் இட வேண்டும். இதனால் காச நோய் அகலும்.

செம்மர சமித்து : இது அங்காரக கிரக சமித்தாகும். இதனால் ரண ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும்.

கரும்பு : கரும்புத் துண்டுகளையாவது அல்லது கருப்பஞ்சாறையாவது கொண்டு ஹோமம் செய்தால் வரனுக்கு விரும்பிய கன்னிகையும், கன்னிகைக்கு விரும்பிய வரனும் கிடைப்பர். இதையும் கணபதி ஹோமத்தில் பயன்படுத்துவார்கள்.

எள் : ஹோமத்தில் எள் போட்டு யாகம் செய்ய பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும். தீராத கடன் தொல்லை தீரும்.

புங்க மரம் : இதன் சமித்து வெற்றியைத் தரும்.

வல்லாரைக் கொடி : இதை ஆகுதி செய்தால் கல்வி சிறப்பாக வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும். சரஸ்வதி கடாட்சமும் ஏற்படுத்தும்.

சந்தன மரம் : இதன் சமித்தால் ஹேமம் செய்தால் மூதேவி முதலிய சகல பீடைகளையும் விலக்கி லட்சுமி கடாட்சம் ஏற்படும். சகல சம்பத்துடன் வாழ்வார்கள்.

வேங்கை மரம் : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் பில்லி சூன்யம், ஏவல், பிசாசு, பயம் ஓழியும்.

மகிழம்பூ : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல துக்கங்களும் நிவர்த்தியடைந்து சிக்கல்கள் அனைத்தும் தீரும். மனம் அமைதி பெறும்.

நவதானியங்கள் : அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகும். சுபிட்சம் நிலவும்.

மஞ்சள் : முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்துக்குச் சிறந்தது. சகல வியாதிகளை நீக்கும். அதோடு கல்வியும், செல்வமும் தரும்.

அரச மரம் வேதத்தில் உள்ளது; சிந்து சமவெளியிலும் உள்ளது. அரசு, ஆல், அத்தி ஆகிய மூன்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. இது மூன்றும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் மூன்று நாமங்களாக வருகின்றன.

வன்னி மரத்தையும் அரச மரத்தையும் கொண்டு தயாரிக்கப்பட்ட அரணிக் கட்டையைக் கொண்டே யாக யக்ஞங்களுக்கான தீ/ அக்னி மூட்டப்படும்.

பலாச மரத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் கரண்டிகளைக் கொண்டே யாகத்தில் ஹவிஸ், நெய் முதலியவற்றை ஆகுதி செய்வர்.

நம்முடைய கலியுக உணவு முறையில் மூலிகைப் பொருட்கள் இடம் பெறுவதே கிடையாது. பலவிதமான நாட்டு மருந்து பொருட்களும், மூலிகைப் பொருட்களும் உடலில் சேர்ந்தால்தான் நமது உடல் திடகாத்திரமாகவும், ஆயுள் விருத்தியுடனும் விளங்கும்.

யாக குண்டத்தில் பலவிதமான மூலிகைப் பொருட்களும், தெய்வீக சக்தி நிறைந்த பலவிதமான திரவியங்களும் சேர்க்கப்படுகின்ற பொழுது அவற்றின் சாரமானது வாயு வடிவத்தில் நம் உடலைச் சேருகின்றது. தலை முதல் பாதம் வரை அனைத்து தேகங்களுக்கும் 72,000 நாடி நரம்புகளுக்கும் இத்தகைய தெய்வீக மூலிகா பொருட்களின் வாயு பந்தன சக்தியானது ஹோமப் புகை மூலம் சேருவதால் இது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தருவதோடு, மனதிற்குத் தெளிவையும், உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் தருகின்றது.