ஹோமம் யாகம்

Homam Yagam

25 A/1, Mettupalayam Road, Goundampalayam, Coimbatore - 641030.
Contact No : +91 - 8344242526

ஹோம குண்டத்தின் அமைப்பும், வகைகளும்..

சித்தர்கள் ஹோம குண்டங்களை ஆறு வகையாக கூறியிருக்கின்றனர். ஒவ்வொரு தேவைக்கேற்ப இந்த ஹோமகுண்டங்களின் அமைப்புகள் மாறுபடும். ஹோம குண்டங்களின் ஐந்து படிநிலைகளை கொண்டதாக அமைத்திட வேண்டும். நடுவில் வட்டவடிவமான குழி அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஹோம குண்டத்தின் மகத்துவத்தினை அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.

"தானான தீபமடா மந்திரபீடம்
சராசரத்துக் குயிரான மந்திரபீடம்
வானான அண்டமடா மந்திரபீடம்
மகத்தான ரவிமதியு மந்திரபீடம்
சிவாயகுரு பீடமென்ற பீடங்கள்போடே"
- அகத்தியர்

மேலும் இவற்றுடன், பசுப்பால், பசுத்தயிர், பசுநெய், கோசலம், மற்றும் கோமயம் பயன் படுத்தப்படும். மேலும் இதில் அனைத்துவகை மூலிகை தாவரங்களும் பயன்படுத்தலாம். அத்துடன் தானிய வகைகளும், அனனம், எலுமிச்சை, பருத்தி ஆடைகள் மற்றும் நூல்களும் மேலும் பல பொருட்களும் வழிப்பாட்டின் தேவையைப் பொறுத்துப் பயன் படுத்தபடுகிறது என்கின்றனர்.

நமது இந்துமதத்தினர் நல்ல விஷேசங்கள் ஆனாலும், கெட்ட காரியங்கள் ஆனாலும் ஹோமம் வளர்ப்பது வாடிக்கையான சம்பிராதயம். மரகுச்சிகளை போட்டு நெருப்பு வளர்ப்பதில் என்ன இருக்கிறது என்று கேலி பேசியவர்கள் போபால் விஷவாயுதாக்கிய சம்பவத்தில் அக்னி ஹோத்ரா ஹோமம்செய்தவர்கள் மட்டும் தப்பியதை அறிந்தபிறகு அதில் ஏதோ இனம் புரியாத விஷயம் அடங்கி உள்ளது என்று சற்று வாய்மூட ஆரம்பித்துவிட்டார்கள.

புதிய வேலைகளை துவங்குவதற்கு கணபதி ஹோமம், ஜாதக தோஷங்களை விலக்குவதற்கு நவக்கிரக ஹோமம், எதிரிகளின் தொல்லை அதிகமாகாமல் தடுக்க சுதர்சன ஹோமம் என்று செய்வதை கேள்விபட்டிருக்கிறோம். அந்த ஹோமங்கள் செய்யும் போது சதுரவடிவிலேயே குண்டங்கள் அமைக்கப்படுவதையும் பார்த்திருக்கிறோம். இவை தவிர வேறு சில ஹோமங்கள் செய்யும் போது சதுரம் மட்டும் அல்லாமல் பல்வேறு வடிவிலும் ஹோம குண்டங்கள் அமைக்கப்படுவதை காண்கிறோம்.

ஹோமம் என்பதே நெருப்பை வளர்த்து கடவுளை வழிபாடும் ஒரு சடங்குதானே, இதற்கு ஒரே வடிவத்தில் குண்டங்கள் அமைத்தால் போதாதா வட்டம் முக்கோணம் என்று அமைக்க வேண்டுமா என்று பலருக்கும் தோன்றும்.

ஒரு ஹோம நடத்த ஆகுதி பொருட்களும், மந்திரமும் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் ஹோம குண்டத்தின் வடிவமுறை காரணம். ஹோம குண்ட வடிவங்கள் நாம் நினைப்பது போல சாதாரண தோற்றங்கள் அல்ல; அந்த தோற்றங்களுக்குள் பல இயற்க்கை தத்துவங்கள் ரகசியங்கள் மறைந்துள்ளன. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற ஐம்பூதங்கள் தான் இயற்கையின் மூலங்கள் என்று நமக்கு தெரியும்.

அத்தகைய இயற்க்கை மூலங்களான ஐம்பூதங்களுக்கு பண்டைய கால இந்திய விஞ்ஞானப்படி குறியீட்டு உருவமும், சக்தமும் கண்டறியப்பட்டுள்ளது! அதன் அடிப்படையில் தான் ஹோமகுண்ட உருவங்கள் வடிவமைக்கபடுகின்றன. இதன்படி செய்யும் யாகங்களுக்கு கைமேல் பலன் கண்டிப்பாக கிடைக்கும் என்று நமது வேதங்கள் சொல்கின்றன.

பூமியை குறிக்கும் குறியீட்டு வடிவம் சதுரமாகும்; இதன் ஒலி அதிர்வு அதாவது, பீஜமந்திரம் ‘லம்’என்பதாகும். நீரை குறிக்கும் வடிவம் பிறைச்சந்திர வடிவாகும்; இதன் பீஜ மந்திரம் ‘வம்’என்பதாகும். நெருப்பை குறிப்பது முக்கோண வடிவம்; இதன் மந்திரம் ‘ரம்’ என்பதாகும். காற்றை குறிப்பது அறுகோண வடிவாகும்; இதன் பீஜம் ‘யம்’என்பதாகும். ஆகாயத்தை குறிப்பது வட்டவடிவாகும்; இதன் பீஜம் ‘ஹம்’ என்பதாகும். உதாரணமாக எதிரிகளின் தொல்லைகளை முறியடிக்க, வெற்றி வாகை சூட யாகங்கள் செய்யும் போது அதன் குண்ட வடிவம் முக்கோணத்தில் அமைப்பார்கள். குழந்தைகள் பெற, பொருள் ஈட்ட யாகங்கள் செய்தால் வட்டவடிவ யாககுண்டம் அமைப்பார்கள்.

இப்படி ஒவ்வொரு தேவைக்கும் தனித்தனியான யாககுண்ட வடிவமுறைகள் இருக்கின்றன. அவைகளை துல்லியமாக கணக்கிட்டு அமைத்து செய்யப்படும் யாகங்கள் எதுவும் தோர்ப்பது இல்லை.

கோயில்களில் ஹோமம் செய்யும் போது, பசு நெய்யை ஊற்றுகிறார்கள். நெய் கலந்த. அரிசியை இடுவதும் உண்டு. இப்படியெல்லாம், நெய்யை ஊற்றலாமா! நாலு ஏழை பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடாதா என்று வாதம் செய்வோர் உண்டு. ஆன்மிகத்தைப் பொறுத்தவரை, யாக குண்டங்களில் இடப்படும் பொருட்கள், அக்னி மூலமாக, எந்த தெய்வங்களுக்குரிய மந்திரத்தைச் சொல்கிறோமோ, அந்த தெய்வங்களையோ, தேவர்களையோ அடையும் என்று சொல்கிறது.

ஹோம குண்டங்களின் ஆறு வகை:

முக்கோணம்..

நாற் கோணம்..

ஐங்கோணம்..

அறுகோணம்..

எண்கேணம்..

வட்டம்..

யாக , வேள்விகளில் காலம் காலமாக சிறப்பாக நடைபெற நம் முன்னோர்கள் கடைபிடித்து வருகின்ற விதிமுறைகள்....

யாக குண்டத்திற்கான மணல் பெரும்பாலும் புனித நதிப் படுகையிலிருந்தே பெறப்படுவது சிறப்புடையது ஆகும். அல்லது இதற்குரிய நல்வாய்ப்பு கிட்டாவிடில், கிடைக்கின்ற மணலை நன்கு சுத்தப்படுத்தி கங்கை, காவிரி போன்ற புனித நீரைத் தெளித்து, "ஸ்ரீபூமாதேவ்யை நம: ஓம் பூமா தேவியே போற்றி" என்று 108 முறையேனும் துதித்து மிருத்திகா பூஜை செய்த பிறகே அதனை ஹோம குண்டத்தின் அடித்தளமாகப் பயன்படுத்துதல் வேண்டும்.

யாக குண்டத்தில் பிள்ளையார் சுழியோ அல்லது யந்திரங்களோ, சக்கரங்களோ வரைகையில் சூரிய விரலான வலது மோதிர விரலைக் கொண்டே அவற்றை வரைதல் வேண்டும்.

மணலில் நிருதி திக்கில் (தென்மேற்கு) ஒரு சூலமோ அல்லது சங்கு, சக்கரமோ வரைந்து இருப்பது சிறப்புடையது ஆகும். ஹோம குண்டத்திற்குப் பயன்படும் செங்கற்கள் உடைபடாது பின்னமில்லாது சுத்தமாக, புதிதாக ஒரு முறை ஹோமத்திற்கு பயன்படுத்தப்பட்ட செங்கற்களை மீண்டும் பயன்படுத்துதலைத் தவிர்த்தல் வேண்டும். 

ஒவ்வொரு ஹோம செங்கற்கலுக்கும் சந்தனம், விபூதி, குங்குமம், மஞ்சள் பூசிடுக!

யாக வழிபாடு என்பது அக்னி வழிபாடு, ஆகையினால் ஹோமத்தை நடத்துகின்றவர் (ஹோமகர்த்தா) அக்னி திக்கான தென்கிழக்குத் திசையில் அமருவது தான் உத்தமமானது.

ஹோமத்தில் பங்கு கொள்கின்ற அனைவரும் தரையில் அமராது, பலகையின் மீதோ, துணியிலோ, தர்ப்பைப் பாயின் மீதோ தான் அமர வேண்டும். இல்லையெனில் இதில் ஹோமத்தின் பலன்களாகக் கிடைக்கின்ற ஆன்மீகக் கதிர்கள் உடலில் சேராது பூமியில் இறங்கி விடும்.

ஹோமத்திற்காக சுத்தமான பசு நெய்தான் ஆஹுதி அளிக்கப்பட வேண்டும். உலோகப் பாத்திரங்களைத் தவிர்த்து மரக்கிண்ணம், மரப்பாத்திரம் அல்லது வசதியிருப்பின் வெள்ளி, தங்க கிண்னங்களையே வைத்திடுக! தென்னை, பனை ஓலையினால் ஆன தொன்னை ஓலைப் பாத்திரமும் சிறப்பானதே!

யாகத்தில் ஆஹுதியாக இடும் பொழுது மரக்கரண்டியை அல்லது மாவிலையை மட்டும் பயன்படுத்துதல் வேண்டும். எவர்சில்வர் ஸ்பூன் அல்லது வேறு உலோகத்தினால் ஆன ஸ்பூனிலோ பசு நெய்யை எடுத்து நேரடியாக அக்னியில் ஊற்றுவது சாபங்களையே பெற்றுத் தரும்.

யாக மரக்கரண்டியும் குறித்த சில மரங்களினால் செய்யப்படுவதே நன்மை பயக்கும். மா, பலா, தேக்கு, சந்தனம், வேங்கை போன்ற மரங்கள் ஏற்புடையவை. புளி, சவுக்கு போன்ற விறகு மர ஹோமக் கரண்டிகளைக் கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது.

யாகத்தில் இடப்படும் ஆஹுதிகள், அரசு, ஆல், வேம்பு போன்ற மூலிகை மரப் பொருட்களாக இருக்க வேண்டுமே தவிர விறகுகளையோ சிராத்தூள்களையோ ஒரு போதும் பயன்படுத்துதல் கூடாது. இதுவே தற்போதைய ஆலய ஹோமங்களிலும் பெரும்பாலான இல்லற ஹோமங்களிலும் கடைப்பிடிக்கப்படுகின்ற தவறான வழக்கம் ஆகும். தயவு செய்து இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவும். ஹோம குண்டம் அடுப்பு அல்ல, எல்லாவற்றையும் உள்ளே தள்ளுவதற்கு!

ஆண்கள், உடல் சுத்தியுடன் பெண்கள் இருவருமே ஆஹுதிகள் அளித்திடலாம். ஆஹுதி அளிக்கும் பொழுது தர்ப்பையிலான மோதிரத்தை (பவித்திரம்) அணிதல் விசேஷமானதாகும்.

மிகவும் சக்தி வாய்ந்த தெய்வீக அக்னிக் கதிர்களை நேரடியாக நம் சரீரத்தில் பெற முடியாதாதலின் தர்ப்பையே இதனை நமக்குப் பெற்றுத் தருகிறது.

ஆஹுதி அளிக்கப்படும் பொழுது "சுவாஹா" என்று சொல்லப்படும் பொழுது அளிக்கப்படும் ஆஹுதிகளை மட்டும் தான் "சுவாஹா" எனப்படும் தேவ மூர்த்தி பெற்று அந்தந்த தேவதா மூர்த்திகளுக்கு அளிக்கின்றாள்.

யாகங்கள் நடக்கும் பொழுது தேவையில்லாமல் அக்னியைக் கிண்டுவதோ, அனாவசியமாக விசிறி, காற்றை எழுப்புவதோ கூடாது. ஏனென்றால் அக்னியை ஆசனமாகக் கொண்டு பல கோடி தேவதைகள் தேவதா மூர்த்திகள் ஹோம குண்டத்தினுள் உறைகின்றனர்.

பசு நெய் தவிர வேறு எண்ணெயை, ஒரு போதும் அக்னி எழுப்புதவதற்காகப் பயன்படுத்துதல் கூடாது.

யாகப்புகை, மிகுந்த தெய்வீக சக்தி உடையதாகையால் இயன்ற வரையில் ஹோமப் புகையை சுவாசிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஒரு முறை உங்கள் இல்லத்தில் எழுப்பப்படுகின்ற ஹோமப் புகையினால் ஒரு மாதத்தில் உங்கள் வீட்டில் சேருகின்ற தீவினைச் சுழல்களை எளிதில் கழித்து விடலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆண்டாண்டு காலமாக மனதில் நெஞ்சிலும் உள்ள தீயவினைப் படிவுகளை யாக புகை ஒன்று தான் நீர் வடிவில் அவற்றை வெளியேற்றுகின்றது.

ஒரு யாக வழிபாடானது பல்லாயிரக்கணக்கான அர்ச்சனை, ஆராதனைகளின் பலன்களைத் தரவல்லது ஆகும். எனவே இது மிகச் சிறந்த சமுதாயப் பணியாகப் பரிமளிக்கின்றது.

ஸ்ரீஅக்னி மூர்த்தியின் பத்னி தேவியே ஸ்ரீசுவாஹா தேவி ஆவாள். யாகத்தில் வழிபாட்டில் ஸ்ரீஅக்னி மூர்த்தியானவர் தானே ஒரு அக்னி ஆலயத்தை ஏற்படுத்தி அதில் நம்மை வழிபடுவதற்கு வழிவகை செய்கின்றார். எனவே யாக வழிபாடு என்பது அக்னியால் ஆன ஆலயத்தில் நாம் வழிபாட்டைச் செய்வது ஆகும்.

தஞ்சைப் பகுதிகளில் அக்னி பூஜைக்கு செப்பாலான மிகவும் சிறிய அளவிலான ஹோம குண்டங்கள் கிடைக்கின்றன. இதனை வீட்டில் வாங்கி வைத்துக் கொள்வார்களேயானால் மிகச் சிறிய அளவிளான தினந்தோறும் உங்கள் குழந்தைகள் மூலம் ஹோமத்தை செய்து அவர்களுக்கு நல்ல இறைப் பக்தியை அடித்தளமாக ஏற்படுத்தித் தரலாம். இதனைத்தான் அக்காலத்தில் சமிதா தானம், அக்னி சந்தானம், ஔபாசனம் போன்ற அக்னி வழிபாடாக நம் பெரியோர்கள் போற்றி வந்தனர்.