ஹோமம் யாகம்

Homam Yagam

25 A/1, Mettupalayam Road, Goundampalayam, Coimbatore - 641030.
Contact No : +91 - 8344242526

தன்வந்திரி ஹோமம்

நோய் நிவாரணம். (உடல் ஆரோக்கியத்திற்கான ஹோமம்)

தன்வந்திரி ஹோமம், தெய்வீக மருத்துவர் என்று அழைக்கப்படுகின்ற, பிரபஞ்சத்தின் பாதுகாவலரான விஷ்ணுவின் அவதாரமாக விளங்குகின்ற, தன்வந்திரி பகவானின் ஆசிகளைப் பெற வேண்டி நடத்தப்படுகின்றது. இந்த ஹோமத்தின் பொழுது வெளியாகும் ஆற்றல்கள் சக்தி வாய்ந்தவை. நம்மைப் பாதுகாக்கும் கவசமாக செயல்படக்கூடியவை. நோய் மற்றும் ஆரோக்கியக் குறைபாடுகளை நீக்க வல்லவை. இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, தன்வந்தரி பகவானின் பரிபூரண அருளைப் பெற்று, நோயற்ற நீண்ட ஆயுளைப் பெற்று மகிழுங்கள்.

“ஆயுளை நீடித்து அருளைக்கூட்டும்
பாரு ஆவலை யணைபோட்டு
உண்டியை சுருக்கி நாட்டத்தை
யடைக்குமிப் பூசை தமையாற்று
வார் வாத பித்த சுரத்திருந்து விடு
படவார் திண்ணமே
- சிவவாக்கியர்

ஒரு மனிதனின் வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும் யாகம் இது. அதுமட்டுமல்லாமல் இறைவனின் அனுக்கிரகத்தை, அருளைக் கூட்டித்தரும். மனிதனின் மனதைக் கட்டுக்குள் அடக்கி, ஆசைக்கு அணை போடும் ஹோமம் இது. அதிகமாக உண்ணாது, உடலுக்கு ஏற்ற தேவையான உணவை மட்டும் உண்ண வைக்கும் அதீத பூசை, இது. முறையாக இப்பூசை புரிவார்க்கு மூளைக் கோளாறு, மூளை நரம்பினால் ஏற்படும் கோளாறு போன்ற கபால பீடை விலகும். வாத சம்பந்தப்பட்ட பீடை அகலும் என்ற பொருள்பட நிற்கும் செய்யுள் இது.

தன்வந்தரி ஹோமத்தின் சிறப்பம்சங்கள் :

உடல் சம்பந்தப்பட்ட எதிர்மறை அம்சங்களை நீக்கி நல வாழ்வையும், பரவசத்தையும் அளிப்பதே இந்த ஹோமத்தின் சிறப்பம்சம் ஆகும். தன்வந்தரி ஹோமத்தில் 1௦8 மருத்துவ மூலிகைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. சிறந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளின் ஹோமப் புகையும், மணமும், நல்ல பல பலன்களை அளிக்க வல்லவை. தனது அமிர்த கலசத்தின் மூலம் தன்வந்தரி பகவான், தேவர்களைக் காத்தருளியவர். அத்தகைய பகவானின் அருளைப் பெற, இந்த ஹோமத்தில் கலந்து கொள்வது சிறந்தது, இது, உடல் ரீதியிலான நோய்களைத் தீர்க்க வல்லது. வருடத்திற்கு ஒரு முறை இந்த ஹோமம் செய்வதன் மூலம், நீடித்த நல்ல பலன்களைப் பெற முடியும்.

புனிதமான இந்த ஹோமத்தை நடத்துவதற்கு, ஏகாதசி திதி சிறப்பு வாய்ந்த நாளாகும். மேலும், அதிக பலன்களைப் பெற இந்த ஹோமத்தை குரு மற்றும் புத ஹோரைகளில் நடத்துவது நல்லது.

தன்வந்திரி ஹோமத்தில் சேர்க்கப்படும் மூலிகைகளில் , சீந்தில் , தர்பை , வன்னி, எருக்கன் , அரசு , ஆலம் போன்ற கல்ப மூலிகைகளும் , திப்பிலி, சுக்கு, சிவனார் வேம்பு , சிவகரத்தை போன்ற கடைச் சரக்குகளை யாகத்தீயில் நெய் சேர்த்து எரிக்கும் போது வெளி வரும் மூலிகைக் புகையை நாம், சுவாசிக்கும் போது , சுவாசத்தின் வழியாக இரத்தத்தில் கலந்து , நம் இரத்தத்தை சேதப் படுத்தும் கிருமிகளை அழிக்கின்றது . இதனால் நோய்கள் விரைந்து குணமாகிறது

தன்வந்தரி ஹோமத்தின் நற்பலன்கள்:
  • நோய்களுக்கு சக்தி வாய்ந்த தீர்வு கிடைக்கும்
  • உடல் நலப் பிரச்சினைகள் தீரும்
  • உடல் நலம் குன்றியவர்களும், உயிர்க் கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் பயன் பெறுவர்
  • நோயற்ற நீண்ட ஆயுள் பெறலாம்
தன்வந்தரி ஹோம மந்திரம் :

“ஓம் ஹ்ரீம் தன்வந்தரி மகாவிஷ்ணவே நமஹ”