ஹோமம் யாகம்

Homam Yagam

25 A/1, Mettupalayam Road, Goundampalayam, Coimbatore - 641030.
Contact No : +91 - 8344242526

கணபதிஹோமம்

தடைகள் நீங்கும்.. (வெற்றியை பெற்றுத்தரும் ஹோமம்)

முழுமுதற் கடவுள் என போற்றப்படும் விநாயகர், விக்னம் என்று கூறப்படும் தடைகளை நீக்கி வெற்றியை அருளக் கூடியவர். நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு செயலும் தடைகள் இல்லாமல் நடைபெற கணபதியின் அருள் நமக்கு வேண்டும். நம் வாழ்வில் வரும் அனைத்து தடைகளையும் நீக்கி அருள் வேண்டி விநாயகரை குறித்து செய்யப்படும் ஹோமமே “கணபதி ஹோமம்” ஆகும்.

காக்கும் கடவுளாம் கணபதி வணங்குவதற்கு எளிதானவர். கருணைக் கடலாக விளங்குபவர். இவரை வணங்குவதன் மூலம் தடைகள் அகன்று நாம், நம்பிக்கை, தைரியம், வெற்றி, வாழ்வில் வளம் போன்றவற்றைப் பெறலாம். எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்னும் கணபதி ஹோமம் செய்வது சாலச் சிறந்தது. தடைகளும் கவலைகளும் அகன்று வாழ்வில் வளம் பெற கணபதி ஹோமத்தில் பங்கு கொள்ளுங்கள்.

கணபதி ஹோமத்தின் சிறப்பம்சங்கள் :

கணபதி ஹோமம் செய்வதன் மூலம் விநாயகரின் பரிபூரண அருள் நமக்கு கிட்டும். தடைகள் விலகும். முயற்சிகள் யாவும் வெற்றி அளிக்கும். குறிப்பாக புதிய தொழில் தொடங்குவதற்கு முன், புதுமனை குடிபோவதற்கு முன் இந்த ஹோமம் செய்வது சாலச் சிறந்தது. இதன் மூலம் உங்கள் குறிக்கோள் நிறைவேறும். ஹோமத்தின் மூலம் வெளிப்படும் தெய்வீக ஆற்றல் மூலம் உங்கள் விதியை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.

கணபதி ஹோமத்தின் நற்பலன்கள் :
  • வாழ்க்கைப் பாதையில் குறுக்கிடும் தடைகள் நீங்கும்
  • துன்பங்கள் அகலும்
  • தைரியம் பெருகும்
  • புதிய முயற்சிகளைத் தொடங்க, நம்பிக்கை பிறக்கும்
  • நல்ல வாய்ப்புகள் தேடி வரும்
  • கல்வி, வேலை, தொழில் போன்றவற்றில் இலக்குகளை எட்டி, வெற்றி காண இயலும்
  • வாழ்க்கையில் திருப்தியும், நிம்மதியும், சந்தோஷமும் நிறைந்திருக்கும்
கணபதி ஹோம மந்திரங்கள் :

“ஓம் கம் கணேஷாய ஸ்வாஹா”

அல்லது

“ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே

வர வரத சர்வ ஜனமே வச மானய ஸ்வாஹா”