ஹோமம் யாகம்

Homam Yagam

25 A/1, Mettupalayam Road, Goundampalayam, Coimbatore - 641030.
Contact No : +91 - 8344242526

ம்ருத்யுஞ்ச ஹோமம்

பிரேத சாபம் நீங்கும். (ஆயுள், ஆரோக்கியம், பாதுகாப்பு அருளும் ஹோமம்)

மிருத்யு என்பது காலதேவனாகிய, யமனைக் குறிக்கும். சிவபெருமான், தனது பக்தனைக் காக்க இந்த மரண தேவனை வென்றதால், அவர் மிருத்யுஞ்ஜயர் என போற்றப்படுகிறார். காலனை வென்ற சிவனைக் குறித்து செய்யப்படும் ஹோமம், ‘மிருத்யுஞ்ஜய ஹோமம்’ ஆகும்.

மகா மிருத்யுஞ்ஜய மந்திர உச்சாடணத்துடன் செய்யப்படும் மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம், சிவபெருமானின் அருளாசி பெறுவதற்காக நிகழ்த்தப்படுகிறது. இந்த வழிபாட்டின் மூலம், மரண பயம் அகலும், மோட்சம் அடைய வழி பிறக்கும். இந்த ஹோமத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க தெய்வீகக் சக்தி, நமது ஒவ்வொரு அணுவிலும் கலந்து, நம் மனதிலும், நம்மைச் சுற்றிலும் சூழ்ந்திருக்கும் அறியாமையை விலக்குகிறது.

இது நீண்ட ஆயுளுடன், எந்தவிதமான விபத்துக்களும் ஏற்படாதபடி ஒருவன் உயிர் வாழ பெரியோர்கள் சொன்ன ஹோமப் பூசை ஆகும். இதனை முறைப்படி செய்தால் விபத்துக்கள் என்பது வாழுங்காலத்தில் தவிர்க்கவும், அகால மரணங்கள் நேராது காக்கவும் அடித்தளமாக அமையும் என்கின்றனர் சித்தர்கள். பதஞ்சலி என்னும் சித்தர் தமது பாடலில்,

மேலான வாழ்வும் வாழலாகுமே சிவனாருக்
கமைந்த காலாக்கினி பூசா வழியே
வண்ணமிட்ட மட்ட பட்டோடு
பஞ்சதானிய வுலோகத்துடனே சாமமிரண்டு
கடைதனிலாற்றிடவே சென்மத்தும்
தேகமது வச்சிரமாக காயமது பிணியின்றி
நீடுவாழ மய்க்கதிராலாமிது சாத்தியமே”

- பதஞ்சலி

மெய்ஞானமும் விஞ்ஞானமும் கலந்தது இந்த பாடலின் வரிகள். காலாக்கினி என்பது மகாமிருக்த்ஞ்ஞ ஹோமம் ஆகும். எட்டு வேறு வேறு வர்ணங்களில் ஆன வஸ்திரங்களை ஹோமத்தில் சேர்க்க வேண்டும். ஐந்து விதமான உலோகங்களுடன் ஐந்து வேறு தான்யங்களையும் தீயில் ஆகுதி செய்திடவேணும்.

ஐந்து சாமங்கள் என்பது ஒரு பகல், பகல் காலத்து இந்த ஹோமம் செய்தால், கடைசி இரண்டு சாமங்களில் இந்த பூரணாஹஸ்தி நடைபெற வேணும். ஒருவித நுண்ணிய கதிர்கள் இந்த ஹோமத்தின் வாயிலாக எழுகின்றன. இது நாம் யாருக்காக இந்த ஹோமத்தைச் செய்கிறோமோ, யார் இந்த ஹோமத்தின் எஜமானோ அவனைச் சென்று இக்கதிர்கள் தாக்க, மூளையில் உள்ள நுண்ணிய அணுக்கள் சற்று துடிப்பை சீரிய முறையில் அடைந்து எண்ணற்ற நுணுக்கங்களைக் கற்றுத் தேறுகின்றன. எனவே விபத்துக்களிலிருந்து தப்பும் வழியை அனிச்சையாகவே அறிந்து செயல்பட, பாதுகாப்பு பலமாகி நிற்க நோய்கள் எளிதில் தாக்காது. தாக்கிய சிறுபீடைகள் திரேகத்தை வாட்டாது விலகிப் போகின்றன என்கிறார் சித்தர்.

மிருத்யுஞ்ஜய ஹோமத்தின் சிறப்பம்சங்கள் :

மிருத்யுஞ்ஜய ஹோமம் ஆயுள், ஆரோக்கியம், பாதுகாப்பு என்ற மூன்றையும் அருளக்கூடியது. இந்த ஹோமத்தில் ஓதப்படும் மந்திரங்கள், தெய்வீக ஆற்றல் வாய்ந்தவை. பக்தியுடன் உச்சரிக்கப்படும் இவை, நம் ஆழ்ந்த விருப்பங்களையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றக் கூடியவை.

இந்த ஹோமம், உடல், மனம் இரண்டையும் சுத்தப்படுத்தி, நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு அளித்து, தீராத வியாதிகளையும் தீர்க்கும் அருமருந்தாகும். மிருத்யுஞ்ஜய ஹோமத்தில் பங்கு கொண்டு, இதன் அளப்பரிய ஆற்றல் பெற்று, அதன் மூலம் அனைத்து தடைகளையும் நீக்கி, எதிர்மறை சக்திகளை வென்று, நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெறுங்கள்.

இதில், தெய்வீக அருள் பெற்ற மந்திரங்கள் பயபக்தியுடனும், அர்பணிப்புடனும், ஓதப்படுகின்றன. இவ்வாறு நிகழ்த்தப்படும் ஹோமம், ஆரோக்கியத்தை அளித்து, மரண பயத்திலிருந்து விடுவிக்கக் கூடியது.

மிருத்யுஞ்ஜய ஹோமத்தின் நற்பலன்கள் :
  • நோய்கள் அகன்று, ஆரோக்கிய வாழ்வு கிடைக்கும்
  • நீண்ட ஆயுள் கிடைக்கும்
  • பிறப்பு, இறப்பு என்ற சுழலிலிருந்து விடுபட இயலும்
  • தீமைகளை வெல்லும் ஆற்றல் கிடைக்கும்
  • உங்கள் உள்ளும், புறமும் சக்தி பிறக்கும்
  • பலமும், மன வலிமையும் பெருகும்
  • மரண பயம் விலகும்
மிருத்யுஞ்ஜய ஹோம மந்திரம் :

“ஜும் ஸா ஸா ஜும் ஜும் ஓம் அம்ருத் மிருத்யுஞ்ஜயாய நமஹ”