ஹோமம் யாகம்

Homam Yagam

25 A/1, Mettupalayam Road, Goundampalayam, Coimbatore - 641030.
Contact No : +91 - 8344242526

சண்டி ஹோமம்

தரித்திரம், பயம் விலகும். (துன்பங்கள் விலகி தெய்வீக பாதுகாப்பு பெறுவதற்கான ஹோமம்)

“மேன்மைகள் பெற்றே மேலோனாய்
நிற்கலாங் கண்டீர் -- இந்திர சந்திரா
யனுமடங்க கண்டோமே; கலை
யடு ஞான விருத்தியமடங்க விதுவே
வித்தாமென கொங்கணயாமுஞ் சத்தியஞ்
செய்வோமே”

- கொங்கண சித்தர்

இப்பாடல் பொருள் புதைந்தது. ஒரு மனிதன் மிக உயர்ந்த நிலை அடையவும். கீர்த்தி மிகுந்து பெறவும், பெரிய பெரிய பதவிகளை எட்டவும் இந்த சண்டி ஹோமம் செய்யவேணும். அசுவமேத யாகத்திற்கு இணை இது என்பர் சித்தர். இந்திரன், சந்திரன், பிரமன் உள்ளிட்ட தேவர்களின் அருள் சேரும்.

 • மஹாகாளி சண்டிகை
 • மஹாலக்ஷ்மி சண்டிகை
 • சங்கரி சண்டிகை
 • ஜெயதுர்கை சண்டிகை
 • மஹா சரஸ்வதி சண்டிகை
 • பத்மாவதி சண்டிகை
 • ராஜமாதங்கி சண்டிகை
 • பவானி சண்டிகை
 • அர்தாம்பிகை சண்டிகை
 • காமேஸ்வரி சண்டிகை
 • புவனேஸ்வரி சண்டிகை
 • அக்னி துர்கை சண்டிகை
 • சிவாதாரிகை சண்டிகை

இந்த 13 சக்திகளும் இணைந்த சக்தி ‘மஹா சண்டிகா பரேமஸ்வரி’. இந்த யாகங்கள் முரத்தினாலே செய்யப்படும். மார்கண்டேயரால் சொல்லப்பட்ட, மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, மஹாகாளி என மூவருக்குமே செய்யப்படும் இந்த ஹோமத்தில் 700 மந்திரங்களினால் இந்த யாகம் நடைபெறும். இந்த யாகம் செய்வதனால். உலக நன்மை… சத்ரு பயம் நீங்கும். லஷ்மி தேவியின் அனுக்ரஹம் கிட்டும் .குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்...குழந்தை பாக்கியம் கிட்டும்..தொழில் முன்னேற்றம். அனைத்து காரியங்களும் வெற்றி.......

இந்த யாகம் நடக்கும் பொழுது மந்திரங்களை காதினால் கேட்டாலே (ஸ்ருதம் ஹரதி பாபானி ததா ஆரோக்யம் ப்ரயச்சதி) அணைத்து விதமான பாவங்களும்.....எந்தவிதமான நோய்களும் நிவர்த்தி ஆகிவிடும் என்று சண்டி யாகத்திலே சொல்லபடுகிறது.

சண்டி ஹோமத்தின் சிறப்பம்சங்கள் :

சமுதாய, பொருளாதார நிலை உயரவும், அனைத்து முயற்சிகளில் வெற்றி அடையவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் செய்யப்படும் இந்த சண்டி ஹோமம், ஒரு பிரத்யேகமான ஹோமமாக விளங்குகிறது. உங்களைச் சூழ்ந்திருக்கும் தீமைகளைக் களைந்து, நம்பிக்கையை உருவாக்கி, உங்கள் திறமைகளை மேம்படுத்தி, அமைதியையும், செழிப்பையும் தரவல்லது, இது. தீய வினைகளை அகற்றி, எதிர்மறை சக்திகளைக் களைந்து, துன்பங்கள் நீக்கி, அன்னை துர்கா தேவியின் அருளைப் பெற்று வாழ, சண்டி ஹோமத்தில் பங்கு கொள்ளுங்கள்.

வருடத்திற்கு ஒரு முறை இந்த ஹோமத்தைதத் தவறாமல் செய்வதன் மூலம், உங்கள் ஆசைகள் நிறைவேறி, பரிபூரணமான வாழ்வை, நீங்கள் வாழ இயலும்.

சண்டி ஹோமத்தின் நற்பலன்கள்:
 • இடையூறுகளையும், தடைகளையும் நீக்கிக் கொள்ள இயலும்
 • பிரச்சினைகளைத் தீர்க்க இயலும்
 • உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும்
 • உங்கள் இலக்குகளை அடைய இயலும்
 • திருஷ்டிகளைக் களைய இயலும்
 • சாப விமோசனம் பெற இயலும்
 • நீடித்த ஆரோக்கியத்தையும், சுபீட்சத்தையும் அனுபவிக்க இயலும்
சண்டி ஹோமத்திற்கான மந்திரம் :

"ஐம் ஹ்ரிம் க்ளிம் சாமுண்டாயே விச்சி"