ஹோமம் யாகம்

Homam Yagam

25 A/1, Mettupalayam Road, Goundampalayam, Coimbatore - 641030.
Contact No : +91 - 8344242526

சத்ருசம்ஹார ஹோமம்

சத்ரு சம்ஹார ஹோமம் தீயவற்றிலிருந்து, எதிரிகளின் தொல்லையிலிருந்து, நாம் பாதுகாப்பு பெற சுப்பிரமணிய சுவாமியின் அருளாசியைப் பெற்றுத் தர நடத்தப்படுகின்றது.. சுப்பிரமணியர், சிவ பார்வதியின் மைந்தன், ஆனை முகக் கடவுளாம் விநாயகரின் தம்பி. ரிக் வேதத்தில் அவரது அளப்பரிய சக்தியைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அவர் நம்மை தீமையிலிருந்து காப்பற்றி வாழ்வில் நலன் அளிக்க வல்லவர். அவரை ஆராதிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த ஹோமம், மந்தநிலை, பயம், ஆன்ம பயம் நீக்கி அனுகூலமான சூழ்நிலையை உருவாக்க வல்லது.

இந்த ஹோமத்திலிருந்து உருவாகும் மிகப்பெரிய ஆற்றல் ஒரு பாதுகாப்பு கவசமாக விளங்கி நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வழி காட்டுகின்றது.

சத்ருசம்ஹார ஹோமத்தின் சிறப்பம்சங்கள்:

சத்ருசம்ஹார ஹோமம் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த ஹோமம். இது சுப்பிரமணியரின் தெய்வீக அருளை பெற்றுத் தந்து நம்மை எதிர்மறை தாக்ககங்களிலிருந்து காக்கின்றது. கடவுள், முன்னோர்கள் மற்றும் கிரகங்களின் சாபங்களிலிருந்து நம்மை விடுவித்து தீய கர்மாவினை நீக்குகின்றது. வாரிசுகள், குடும்ப நல்லுறவு, கடன்களிலிருந்து விடுதலை மற்றும் நோய்களிலிருந்து பாதுகாப்பு போன்ற நல்லாசிகளை வழங்குகின்றது.

சத்ருசம்ஹார ஹோமத்தினால் கிடைக்கும் நன்மைகள்:
 • தொடர்ந்து எதிரிகளை சந்திப்பவர்கள் (இராணுவ மற்றும் போலிஸ் நபர்கள்) பலனடைவார்கள்
 • அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் பலனடைவார்கள்
 • வியாபாரத்தில் போட்டியாளர்களிடமிருந்து பாதுகாக்கிறது
 • சூனியம், திருஷ்டியால் கஷ்டப்படுகிறவர்கள் பலனடைவார்கள்
 • நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலனடைவார்கள்
 • எதிர்மறை சக்திகளிடமிருந்து பாதுகாப்பு வழங்குகிறது
 • கிரகங்களின் அனுகூலமற்ற நிலைப்பாட்டை மாற்றியமைக்கின்றது
 • கடன்களில் இருந்து விடுதலை பெற்றுத் தரும்
 • சந்ததி வளர உதவுகின்றது
 • குடும்ப உறவுகளை மேம்படுத்துகிறது
 • மந்தம் மற்றும் பயத்தை நீக்குகிறது
 • மூதாதையர் சாபங்களை அகற்றுகின்றது
சத்ருசம்ஹார ஹோமத்திற்கான மந்திரம்:

“ஓம் கார்த்திகேயாய
ஷக்தி ஹஸ்தாய தீமஹி
தன்னோ ஸ்கந்த ப்ரசோதயாத்”