ஹோமம் யாகம்

Homam Yagam

25 A/1, Mettupalayam Road, Goundampalayam, Coimbatore - 641030.
Contact No : +91 - 8344242526

சுதர்ஸன ஹோமம்

கடன் தொல்லை நீங்க, பில்லி சூன்யம் ஏவல்கள் அகல…

ஸ்ரீசுதர்சனரின் மூல மந்திரத்தை 12 லட்சம் தடவை உச்சரித்து ஒருவர் ஹோமம் செய்தால் இந்த மந்திரத்துக்கு உண்டான ஸித்தி கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால் பாயசம் ஆகிய ஒவ்வொன்றையும் கொண்டு, குறிப்பிட்ட (ஆயிரம் ஆயிரமாக எண்ணிக்கையில் அந்த மந்திரத்தை உளமார உச்சரித்து ஜபிக்க வேண்டும். முழு மனதோடு மிகுந்த முயற்சியுடன் செயல்பட்டால்தான் கிடைக்கிற பலன் முழு அளவில் இருக்கும்.

ப்ரஜேதஸ் என்பவனின் குமாரர்கள் பத்தாயிரம் வருடம் தொடர்ந்து தவம் இருந்தனர். பகவான் வரவே இல்லை. இந்த தவத்தைக் கண்டு பகவான் சந்தோஷம் அடைந்தாரே தவிர, உடனடியாக அவர்களுக்குக் காட்சி தரவில்லை. காரணம், அந்த நேரத்தில் அவர்களுக்குத் தன் உதவி தேவை இல்லை என்று பகவான் முடிவு செய்து விட்டார். யார் யாருக்கு, எப்போது தனது அனுக்கிரஹம் தேவை என்பதையும் கடவுளே தீர்மானிப்பார். இந்தத் தவத்துக்குப் பிறகு ஒரு கட்டத்தில் ப்ரஜேதஸின் குமாரர்களுக்கு பகவான் வந்து காட்சி தந்ததாக ஒரு கதை உண்டு.

வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவதற்கு நாம் ஸ்ரீசுதர்சன ஹோமம் செய்வது அவசியம். இதன் பலன்கள் ஏராளம். பொதுவாக, பல வகையான ஹோமங்கள், ஏதோ குறிப்பிட்ட ஒரு நற்பலனை உத்தேசித்து மட்டுமே செய்யப்படுபவை. ஆனால், ஸ்ரீசுதர்சன ஹோமம் பல நற்பலன்களைக் கொடுக்க வல்லது.

இந்த ஹோமத்தில் ஸ்ரீசுதர்சனரின் மூல மந்திரம், காயத்ரி மந்திரம் இவற்றைச் சொல்லி ஹோமம் செய்ய வேண்டும்.

  1. தீர்க்க ஆயுசு நிச்சயம்!
  2. அஷ்ட ஐஸ்வர்யம்!
  3. புத்தியில் தெளிவு!
  4. இனி ஆபத்து இல்லை!
  5. பசு விருத்தி!
  6. எதிரிகள் தொல்லை!
  7. மன நலம் குணமாகும்!
  8. தீராத நோயும் தீரும்!
  9. கோபம் தணியும்!
  10. சுகப் பிரசவம் உறுதி!
சில மந்திரங்கள் :

“ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி
ஜனவல்லபாய ஓம் பராய பரமபுருஷாய பரமாத்மனே! மம பரகர்ம
மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர ஸஸ்த்ர வாத ப்ரதிவாதானி
ஸம்ஹர ஸம்ஹர ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா
சுதர்சனயா தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபன கராய
ஹும் பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா”

விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து, சுத்தமான உடை அணிந்து கிழக்கு நோக்கி அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு குறைந்தபட்சம் ஒன்பது தடவை – கூடிய பட்சம் 108 தடவை பாராயணம் செய்தால் அவர்களுக்கு பீடைகள் ஒழியும். சௌபாக்கியம் பிறக்கும்.

சுதர்சன மந்திரத்தில் ‘ஓம் க்லீம் க்ருஷ்ணாய…’ என்று தொடங்கும் மந்திரமே பெரும்பாலும் சுதர்சன ஹோமத்திற்குப் பயன்பட்டு வருகிறது. ஸர்வ சத்ரு நாசன சுதர்சன மந்த்ரம் இதுதான்..

“ஓம் மஹா ஸுதர்சனாய;ஸர்வ சத்ரு ஸம்ஹர ஸம்ஹர; ஸர்வ க்ஷுத்ரம் மாரய மாரய; ஸர்வ ரோகம் நிவாரய நிவாரய; மஹா ஸுதர்சனாய சக்ர ராஜாய ஹும்பட் ஸ்வாஹா”

இந்த மந்திரத்தை வெண்கடுகு, ஸமித்து கொண்டு ஹோமம் செய்தால் சத்ருக்கள் அழிவார்கள். நாயுருவி உபயோகித்தால் வியாதி நாசம்… வெண்பட்டு ஹோமத்தில் இட்டால் ஐச்வர்ய விருத்தி… செந்தாமரையை இட்டால் கடன் நிவாரணம் ஆகியவை ஏற்படும்.