ஹோமம் யாகம்

Homam Yagam

25 A/1, Mettupalayam Road, Goundampalayam, Coimbatore - 641030.
Contact No : +91 - 8344242526

ஸ்வயம்வரா ஹோமம்

திருமணதடை அகல, விரைவில் கைகூட. (சிறந்த திருமண வாழ்க்கையை அருளும் ஹோமம்)

சக்தியின் ஸ்வரூபமான பார்வதி தேவி, சிவ பெருமானின் சரி பாதி அம்சமாக விளங்குபவள். சிவபெருமான், சக்திக்கு அளித்த ஸ்வயம்வர பார்வதி மந்திரம் திருமணத் தடைகளை வேரறுக்க வல்லது. கிரக தோஷம் காரணமாக ஏற்படும் திருமண தோஷம் அல்லது திருமணத் தடையை அகற்றுவதற்காக, ஸ்வயம்வர பார்வதி ஹோமம் நடத்தப்படுகின்றது.

திருமணத்திற்கு தகுந்த வரன் அமையவும், திருமணமான தம்பதிகளிடையே நல்லுறவு வளரவும், பிரிந்து வாழும் தம்பதியர் இணைந்து வாழவும் இந்த ஹோமம் துணை புரிகிறது. திருமணத்திற்கு காத்திருக்கும் இளம் பெண்களுக்கு இந்த ஹோமம் சாலச் சிறந்தது. திருமணமாவதில் இருக்கும் பிரச்சினை மற்றும் திருமணமான பின்பு வரும் பிரச்சினை போன்றவகளை தீர்த்து, அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ இந்த ஹோமத்தில் பங்கு கொள்ளுங்கள்.

ஸ்வயம்வர பார்வதி ஹோமத்தின் சிறப்பம்சங்கள் :

இந்த ஹோமத்திலிருந்து வெளிவரும் ஆற்றல் மிக்க சக்திகள், சிறந்த துணையை வாழ்க்கைத் துணையாக அடையவும், உங்கள் திருமண வாழ்வில் உள்ள அனைத்து தடைகள் நீங்கவும், நீங்கள் இணக்கமான தம்பதியராய் வாழவும் பேருதவி புரியும். திருமணத்திற்குக் காத்திருக்கும் இளம் பெண்களுக்கும், இந்த ஹோமம் மிகவும் ஏற்றது.

பார்வதி தேவியின் அருளால், திருமண வாழ்வில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்கி, கணவரும் மனைவியும் ஒருவருக்கொருவர் பொருத்தமான தம்பதியராக வாழும் பேறு பெறுங்கள். இந்த ஹோமத்தை நீங்கள், உங்கள் ஜென்ம நட்சத்திர நாளன்றும், வெள்ளிக்கிழமைகளில் வரும் அஷ்டமி திதியன்றும் செய்யலாம்.

ஸ்வயம்வர பார்வதி ஹோமம் செய்வதினால் கிடைக்கும் நன்மைகள் :
  • மனதிற்கு பிடித்த, பொருத்தமான மணாளனை, கன்னிப் பெண்கள் அடையலாம்
  • திருமணமானவர்கள், கருத்தொருமித்த, மகிழ்ச்சியான மண வாழ்க்கை வாழலாம்
  • பெண்கள், கணவனுடன் மனமொருமித்து வாழலாம்
  • துணைவருடன் நல்லுறவை விரும்பும் பெண்கள், பெரும் பயன் பெறலாம்
  • மண வாழ்க்கையில் இணக்கத்தை காணலாம்
  • மண வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் ஆக்கிக் கொள்ளலாம்
ஸ்வயம்வர பார்வதி ஹோம மந்திரம் :

“ஓம் ஹ்ரீம் ஸ்வயம்வர கால பார்வத்யை நமஹ”